1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Arvind Kejriwal's Political Comeback: Riding High on By-Election Wins in Punjab, Gujarat

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

arvind kejriwal
ஒரு காலத்தில் எங்கும் நிறைந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், திடீரென காணாமல் போனார். டெல்லி தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் தனித்தன்மை வாய்ந்த ஒரு காலகட்டத்தை கொண்டிருந்தார். நான்கு மாதங்களாக பொதுவெளிக்கு வராமல் இருந்த கெஜ்ரிவால், இப்போது மீண்டும் எழுச்சி பெறும் தருணம் வந்துவிட்டது. இதற்கு குஜராத் மற்றும் பஞ்சாபில் கிடைத்த இடைத்தேர்தல் வெற்றிகளே காரணம்.
 
நேற்று ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த இரட்டை வெற்றிகள், கெஜ்ரிவாலுக்கு நான்கு மாத அமைதிக்கு பிறகு மீண்டும் நம்பிக்கையை துளிர்த்துள்ளன. 2025 பிப்ரவரியில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் டெல்லிதான் கட்சியின் அரசியல் அஸ்திவாரம். இந்த தோல்வியின் தாக்கம் இன்னும் இருந்ததை, ஆம் ஆத்மியின் டெல்லி பிரிவு தலைவர் சௌரப் பரத்வாஜின் கருத்துக்கள் உணர்த்தின. 
 
இந்த நிலையில் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி பஞ்சாபின் லூதியானா மேற்கு மற்றும் குஜராத்தின் விசாவதர் தொகுதிகளில் பெரும் வெற்றிகளை பதிவு செய்தது. இது ஒரு அரவிந்த் கெஜ்ரிவால் பாணி கம்பேக். மோடியின் கோட்டையான குஜராத்தில் ஆம் ஆத்மியின் வெற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
 
இந்த வெற்றிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கைகள், பகவந்த் மான் அரசின் செயல்பாடுகள், எங்கள் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கடின உழைப்பு, மற்றும் சஞ்சீவ் அரோராவின் (வேட்பாளர்) நேர்மை ஆகியவையே காரணம்," என்று பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் மற்றும் மாநில அமைச்சர் அமன் அரோரா தெரிவித்தார்.
 
இந்த நிலையில் இடைத்தேர்தல் வெற்றியால் உற்சாகமாகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய அரசியலுக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் ராஜ்யசபா எம்பி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு