1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (10:23 IST)

ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து: பொதுக்குழுவில் தீர்மானம்

ops eps
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்த நிலையில் அந்த இரண்டு பதவிகளும் ரத்து செய்யும் தீர்மானம் இன்றைய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட.
 
இதனை அடுத்து இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்பது உறுதியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இன்றைய மற்ற தீர்மானத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது
 
மொத்தம் உள்ள 16 தீர்மானங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகள் ரத்து என்றும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது