திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (09:35 IST)

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

admk eps
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
இன்று நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தப்பினார் வழக்கு தொடர்ந்த நிலையில் பொதுகுழு நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
மேலும் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று சென்னை வானகரத்தில் பொதுக்குழு தற்போது நடைபெற்று வருவதாகவும் பொதுக்குழு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சற்று முன்பு சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழுவில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது