1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (09:54 IST)

ஜெயலலிதா பெயர் நீக்கம்!? இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடியார்!

அதிமுக பொதுக்குழு தொடங்கிய நிலையில் முதல் தீர்மானமாக கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளராக ஜெயலலிதாவின் பெயர் இருந்த நிலையில் நிரந்தர பொதுசெயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. அதை தொடர்ந்து மற்ற பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இடைக்கால பொதுசெயலாளர் பதவி முடியும் வரை மற்ற பொறுப்பாளர்களின் பொறுப்புகளும் நீடிக்கும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுசெயலாளர் பதவிக்கு 4 மாதங்களுக்கு பின் தேர்தல் நடத்தப்படும் என்றும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் பொதுக்குழு கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது.