1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (08:34 IST)

அதிமுகவினர் வேன் மீது மோதிய லாரி..! – மதுராந்தகம் அருகே விபத்து!

accident
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வானகரம் நோக்கி சென்ற அதிமுகவினர் வேன் மீது லாரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழு மீதான தடை வழக்கிற்கு காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள வானகரத்தில் அதிமுகவினர் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக வேனில் புறப்பட்ட அதிமுகவினர் சிலர் மதுராந்தகம் அருகே வந்துக் கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்றுடன் வேன் மோதியது. இதில் 15க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.