1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. donald trump said epstein worked against him

எப்ஸ்டீன் என்னை எதிர்த்தார்!.. நான் எதையும் மறக்கல!.. டொனால்ட் டிரம்ப் ஓப்பன்...

epstein
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்படும் பெயராக Epstein Files இருக்கிறது. அமெரிக்காவை Jeffery Edward Epstein. அமெரிக்காவை சேர்ந்த இவர் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இவர் மீது புகார் உண்டு. மேலும் இரண்டு தீவுகளை விலைக்கு வாங்கி அங்கே பெரும் பணக்காரர்களை வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபடுத்தியதாக சொல்லப்படுகிறது..

அமெரிக்க போலீஸ் இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் மர்மமான முறையில் எப்ஸ்டீன் சிறையில் உயிரிழந்தார். தற்போது அவர் தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் Epstein files என்கிற பெயரில் தொடர்ந்து வெளியாகி உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. எப்ஸ்டீனுடன் இளம் வயதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக்கேல் ஜாக்சன் பில்கேட்ஸ் ஆகியோர் இருந்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது..

ஒரு குற்றவாளியோடு டொனால்ட் டிரம்ப்புக்குக என்ன பழக்கம் என்கிற சர்ச்சை எழுந்திருக்கிறது. ஆனால் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது வெள்ளை மாளிகைதான் என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. ஒரு பக்கம் ட்ரம்புக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் 'எப்ஸ்டீன் விவகாரத்தில் நான் எதையும் மறைக்கவில்லை. அதிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன்.. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. உண்மையில் சிலருடன் சேர்ந்து நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்க கூடாது என வேலை செய்தவர்தான் அவர்’ என்று கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிரடி மாற்றம்: அடுத்த 45 நாட்களுக்கு புதிய ரயில் அட்டவணை!