செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (09:01 IST)

இனி தர்மயுத்தம் இல்ல.. அதிரடி யுத்தம்..? – அதிமுக அலுவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ்!?

ADMK
இன்று வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் நுழைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழு மீதான தடை வழக்கிற்கு காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள வானகரத்தில் அதிமுகவினர் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வானகரத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அங்கிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் மோதல் எழுந்தது.

இதற்கிடையே அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.