செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (07:47 IST)

சசிகலா கூட்டு, இளவரசிக்கு இன்று விடுதலை!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறை தண்டனை அனுபவித்த இளவரசி இன்று விடுதலை. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன்  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தனர். தண்டனை காலம் நிறைவு பெற்றதும் மற்றும் அபராதம் செலுத்தியதால் கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவர் இன்னும் சென்னை வரவில்லை. வரும் 8 ஆம் தேதி சென்னை வருவார் என தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று சசிகலா உடனிருந்த இளவரசி விடுதலை செய்யப்படுகிறார் என சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இளவரசி இன்று காலை 11 மணி அளவில் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என தெரிகிறது.