செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (08:25 IST)

கொரோனா தாக்கத்தால் குறைந்த ரத்த தானம்… ரோட்டரி கிளப் நடத்தும் முகாம்களுக்கு அழைப்பு!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரத்ததானம் அளிப்பது குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இளைஞர்கள் மத்தியில் இரத்த தானம் அளிக்கும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வந்தது. ரத்தங்களை பெற்று பாதுகாத்து வைத்து தேவையானவர்களுக்கு அளிப்பதற்கு தனியார் சேவை நிறுவனங்களும் இயங்கி வந்தன. அவற்றில் முக்கியமானது சென்னையில் இயங்கும் ரோட்டரி கிளப்.

ஆனால் இப்பொது கொரோனா பெருந்தொற்று காரணமாக ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரத்த வங்கிகளில் தேவையான ரத்தவகைகள் கிடைப்பதில் மிகப் பெரிய அளவில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனை முன்னிட்டு மீண்டும் ரத்த தானம் அளிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சென்னை திருவான்மியூர் ரோட்டரி கிளப் மற்றும் வி ஹெச் எஸ் பிளட் பேங்க் ஆகியவை இணைந்து சென்னை பெருந்துறையில் அமைந்துள்ள பொல்லினேனி ஹில்ஸைட்- ல் ரத்த தான முகாமை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்துகின்றனர். இதில் பெருவாரியான தன்னார்வலர்கள் வந்து கலந்துகொண்டு ரத்த தானம் அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புக்கு
Sarada Ramani
President
Rotary Club of Chennai Thiruvanmiyur
9840182538
[email protected]