தொடர்புடைய செய்திகள்
- யார் காலிலும் விழ டெல்லி செல்லவில்லை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
- போராட்டம் தேவையில்ல.. முதல்வரே பெற்று தருவார்! – இடஒதுக்கீட்டில் ராமதாஸ் நம்பிக்கை!
- தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு! – தலைமை ஹாஜி அறிவிப்பு!
- மத்திய அரசின் அழுத்தத்தால்தான் சொத்துவரி உயர்வு! – அமைச்சர் விளக்கம்!
- 18+ படங்களுக்கு சிறுவர்களை அனுமதித்தால்…? – திரையரங்குகளுக்கு கடும் எச்சரிக்கை!
சசிக்கலா ஆதரவாளர் காருக்கு தீ வைப்பு! – அதிமுக பிரமுகர் கைது!
பரமக்குடியில் சசிக்கலா ஆதரவாளர் காருக்கு தீ வைத்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் பரமக்குடியில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்தவர் வின்செண்ட் ராஜா. இவர் அங்கு மேலக்காவனூர் பகுதியில் தார் ப்ளாண்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டில் இவருடன் சசிக்கலா போனில் பேசிய ஆடியோ வெளியான நிலையில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு வின்செண்ட் ராஜா தனது நிறுவனத்தில் காரை நிறுத்தியிருந்தபோது மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் பரமக்குடி காமராஜ் நகர் அதிமுக வார்டு செயலாளர் மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். அரசியல் முன்விரோதம் காரணமாக மணிகண்டன் இதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
