1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (09:57 IST)

மத்திய அரசின் அழுத்தத்தால்தான் சொத்துவரி உயர்வு! – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சொத்துவரியை 40 சதவீதம் வரை உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் என பல பொருட்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் வரியும் உயர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சொத்துவரி உயர்வு குறித்து பேசியுள்ள அமைச்சர் கே.என்.நேரு “சொத்து வரியை உயர்த்த தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை. ஆனால் வரியை உயர்த்தினால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற அழுத்தத்தினால்தான் உயர்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் குறைவான சொத்து வரி வசூலிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.