1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk former mla car fired near madurai

கோவில் திருவிழாவில் முதல்மரியாதை தகராறு.. அதிமுக பிரமுகரின் காருக்கு தீவைப்பு..!

கோவில்
கோவில் திருவிழாவில் முதல்மரியாதை தகராறில் அதிமுக பிரமுகரின் காருக்கு திமுக பிரமுகர் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மதுரை கருவனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அவரது வீடு சூறையாடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம்  காருக்கு தீ வைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
மேலும் கோயில் விழாவில் முதல் மரியாதை வழங்குவதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் வீட்டை, திமுக கிளை செயலாளர் அடித்து நொறுக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புகார் குறித்து சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் புகார் அளித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மேற்குவங்க ரயில் விபத்து நடந்தது எதனால்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!