ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (08:30 IST)

பல வழக்கில் தப்பித்தாலும் போக்சோவில் தப்பிக்க முடியாது! - ஒரே ஒரு வழக்கில் வசமாக சிக்கிய நாகர்கோவில் காசி!

kasi
பல பெண்களை கொடுமை செய்து வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கு வழக்கு நாகர்கோவில் காசி பெண்கள் பலரை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு. பல பெண்களை சமூக வலைதளங்களில் பேசி மயக்கிய காசி அவர்களை வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காசியால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாருக்கு பின் பல பெண்கள் காசி மீது புகார் அளித்தனர். அதில் 18 வயது நிரம்பாத சிறுமி ஒருவரும் அடக்கம். இதனால் காசி மீது போக்சோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் உள்ள 8 வழக்குகளில் 7 வழக்குகளில் காசிக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காமல் 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் காசியை குற்றவாளி என அறிவித்த நீதிபதி காசிக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமாக விதித்துள்ளார். இந்த 1 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K