திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (16:41 IST)

பாலியல் பலாத்கார வழக்கு: நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

kasi
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் காசி மீது சிபிசிஐடி போலீஸ் ஆர் வழக்கு பதிவு செய்திருந்தனர். 120 பெண்களை அவரை ஏமாற்றியதாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர் என்பதும் காசியின் லேப்டாப்பில் 400-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ, 1900க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
மேலும் அவர் 120 பெண்களை ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டதாகவும் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நாகர்கோவில் நீதிமன்றம் வெளியிட்ட நிலையில் இளம்பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
Edited by Mahendran