தொடர்புடைய செய்திகள்
- தொகுதி மாறி வந்ததால் வேட்பாளர் பெயரை மாற்றி கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கௌதமி.ஷாக் ஆன கட்சியினர்.
- நடிகரும் அதிமுக பேச்சாளருமான அருள்மணி காலமானார்!
- எனது முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய குடிமகனால் சலசலப்பு!
- எப்படியாவது ரெண்டாவது இடம் வந்துடுங்க.. பிஜேபிய உள்ள விட்றாதீங்கப்பா! – அதிமுகவினருக்கு திமுக அமைச்சர் கோரிக்கை!
- ஆ.ராசா VS எல்.முருகன்..! ரேசில் அதிமுக..! நீலகிரி தொகுதி யாருக்கு.? கள நிலவரம் என்ன.?
காரில் சோதனை செய்த பறக்கும் படை அதிகாரியிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்..!
தூத்துக்குடியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அந்த வேட்பாளர் சோதனை செய்த அதிகாரிகளிடம் தனக்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும் இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர் சிவசாமி வேலுமணி காரில் சென்று கொண்டிருந்த போது அவரது காரை மறித்து பறக்கும்படி அதிகாரிகள் சோதனை செய்தனர்
சோதனைக்கு பின் அவரது காரில் பணம் பொருள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவரது காரை செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேட்பாளர் ஆர் சிவசாமி வேலுமணி கூறினார். இதற்கு பறக்கும் படை அதிகாரிகள் சிரித்துக்கொண்டே சரி என்று பதில் அளித்தனர் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva
