எப்படியாவது ரெண்டாவது இடம் வந்துடுங்க.. பிஜேபிய உள்ள விட்றாதீங்கப்பா! – அதிமுகவினருக்கு திமுக அமைச்சர் கோரிக்கை!
நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் அனைத்து இடங்களிலும் அதிமுக இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என திமுக அமைச்சர் ஏ.வெ.வேலு அதிமுகவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனல் பறக்கும் வெயிலில் பிரச்சாரம் களைகட்டி வருகிறது தமிழத்தின் 39 தொகுதிகளிலும். இந்த மக்களவை தேர்தல் திமுக – அதிமுக – பாஜக என்ற மும்முனை தேர்தலாக அமைந்துள்ளதால் வழக்கத்தை விட அரசியல் களம் பறபறக்கிறது.
திமுக வேட்பாளர்களுக்கு போட்டியாக பாஜக தங்களிடம் உள்ள ஸ்டார் வேட்பாளர்களாக தமிழிசை, அண்ணாமலை, எல் முருகன் என பலரை களம் இறக்கியுள்ளது. அதிமுகவில் தேமுதிகவிலிருந்து விஜயபிரபாகரன் உள்ளிட்ட சிலர் தவிர வலுவான போட்டியாளர்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் பாஜக அதிகமான வாக்குகளை பெறவும், வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அமைச்சர் எ.வ.வேலு “திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களிடம் ஒப்படைத்த ஆட்சி கலைஞரின் திமுக ஆட்சி. அதிமுகவிடம் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். எப்படியாவது முயற்சி செய்து வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுங்கள். பாஜகவை உள்ளே வர விட்டு விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K