வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (10:26 IST)

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு: அதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு!!

ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

 
சென்னை  கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல்  சட்டமன்ற கூட்டத்தொடரான் இன்று ஆளுநர் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, விசிக, உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 
 
ஆம், நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். 
 
இதனோடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார் என்பது கூடுதல் தகவல்.