செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (07:28 IST)

வெள்ளை மாளிகையிலும் பரவியது கொரோனா: அதிபர் ஜோபைடன் கவலை

வெள்ளை மாளிகையிலும் பரவியது கொரோனா: அதிபர் ஜோபைடன் கவலை
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு இணையாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையிலும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா புகுந்துவிடதாக அதிபர் ஜோ பிடன் மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து வெளியே வரவேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.