செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (08:46 IST)

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் கதி என்ன?

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஆலையின் உள்ளே ஐந்து பேர் சிக்கியிருப்பதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அனுமதி பெறாத பட்டாசு ஆலைகளில் தான் அதிகமான அளவு விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
 
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
 
விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 5 தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.