தொடர்புடைய செய்திகள்
- விடாமல் துரத்தும் செல்பி மோகம்: கொடூரமாய் உயிரிழந்த இந்திய ஜோடி
- ஐயம் வெரி சாரி ; மன்னிப்பு கேட்ட சிவக்குமார் : வீடியோ
- செல்போனை தட்டி விட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்
- என்னைத் தலைவனாக ஏற்க வேண்டாம்: செல்பி பிரச்சனை குறித்து சிவகுமார் விளக்கம்
- செல்பி பிடிக்காதுன்னா வீட்டிலேயே இருக்கனும் - சிவக்குமாரை வெளுத்த நெட்டிசன்கள்
செல்பி எடுத்த இளைஞருக்கு புது செல்போன் வாங்கி தரும் சிவகுமார்
மதுரையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை அவர் தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த சம்பவத்திற்கு முதலில் விளக்கம் அளித்த சிவகுமார் அதன்பின்னர் வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் சிவகுமார் மீதான நெட்டிசன்களின் விமர்சனங்களும், மீம்ஸ்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த செல்பி எடுத்த இளைஞர் சிவகுமார் தட்டிவிட்ட செல்போன் உடைந்துவிட்டதாகவும், அந்த போனின் விலை ரூ.19 ஆயிரம் என்பதால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த பேட்டியை பார்த்த சிவகுமார், அந்த இளைஞரை தொடர்பு கொண்டு புதிய செல்போன் வாங்கி தருவதாக கூறியுள்ளாராம். இதனால் அந்த இளைஞர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
