புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (16:51 IST)

செல்பி பிடிக்காதுன்னா வீட்டிலேயே இருக்கனும் - சிவக்குமாரை வெளுத்த நெட்டிசன்கள்

தன்னோடு செல்பி எடுக்க வந்த இளைஞனின் செல்போனை நடிகர் சிவக்குமர் தட்டி விட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்துள்ளது.

 
நடிகர் சிவக்குமார் ஒரு தனியார் நிறுவன சிறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது அவரோடு சேர்ந்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ஒரு இளைஞரின் செல்பொனை கோபத்தில் கீழே தட்டிவிட்டார். அதிர்ச்சியடைந்த ரசிகர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். இந்த சம்பவம் அந்த இடத்தில் அசாதரணமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
 
அதோடு, அவர் தட்டிவிடுவதற்கு முன் பதிவான புகைப்படத்தை எடுத்து ‘ இது ஒன் மில்லியன் போட்டோ’ என சிலர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பலர் யோகாவையும், தியானைத்தையும் சொல்லிக்கொடுப்பவர் பொது இடத்தில் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் கோபப்படலமா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 
இது அறுவருக்கத்தக்க, வெட்கப்பட வேண்டிய செயல்.  ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது. உங்களுக்கு செல்பி எடுப்பது பிடிக்கவில்லை எனில் வீட்டிலேயே இருக்க வேண்டும். நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 
அதே நேரத்தில், பொது இடத்தில் பிரபலங்களுடன் செல்பி எடுக்கும் முன் அவர்களுடன் அனுமதி கேட்க வேண்டும். அந்த இளைஞர் நடந்து கொண்டது தவறு எனவும் சிலர் சிவக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.