1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AC Electric Train Trial Run Between Arakkonam and Chennai Central to Begin From October 23

சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில்.. எத்தனை மணிக்கு கிளம்பும்.. முழு தகவல்கள்...

அரக்கோணம் சென்னை ரயில்
அரக்கோணம் மற்றும் சென்னை இடையே ஏசி மின்சார ரயில் சேவை நாளை அதாவது அக்டோபர் 23 முதல் சோதனை ஓட்டமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சேவை வரும் டிசம்பர் 24 வரை சோதனை ஓட்டமாக செயல்படுத்தப்படும். மொத்தம் 12 பெட்டிகளை கொண்டுள்ள இந்த ஏசி மின்சார ரயில், வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு இயக்கப்படும்.
 
இந்த சோதனை ஓட்டத்தின் முடிவுகள் மற்றும் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில், இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்படுவது குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும். இதற்கென வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின்படி, காலை 6.30 மணிக்கு ஆவடியில் புறப்படும் இந்த ரயில் அரக்கோணத்தை அடைகிறது. 
 
அதனை தொடர்ந்து காலை 8.00 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு, திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர் மற்றும் பேசின்பிரிட்ஜ் வழியாக காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். 
 
இதேபோல் மாலையிலும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது. தினசரி அலுவலகம் செல்வோருக்கு இந்த வசதி மிகுந்த பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் இன்னொரு புதிய புயல்.. முரசு என்ற தமிழ் பெயர் வைக்க வாய்ப்பு...