வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (11:29 IST)

தம்பி மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த அண்ணன் - ஆத்திரத்தில் படுகொலை

காஞ்சிபுரத்தில் தம்பி மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால், ஆத்திரமடைந்த தம்பி அவரது அண்ணனை படுகொலை செய்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில சமயத்தில் குழந்தைகளை குடும்ப உறுப்பினர்களே சீண்டும் அவலம் நடைபெற்று வருகிறது.
 
அப்படி காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த திருமால், வீட்டில் தனியாக இருந்த தனது தம்பி ரவீந்திரனின் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். 
 
இதனையறிந்த ரவீந்திரன், தனது அண்ணனான திருமால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் திருமால் மீது நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த ரவீந்திரன் திருமாலை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார்.
 
இதுகுறித்து தவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, திருமாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் ரவீந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.