திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (13:10 IST)

மாணவர்களுடன் இணைத்து பேசியதால் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி

திருவாரூரில் பள்ளி மாணவிகள் மூன்று பேர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தேவி, பிரியா, லட்சுமி ஆகிய மூன்று மாணவிகள் 8 வகுப்பு படித்து வருகின்றனர்.
 
இந்த மாணவிகள் மூன்று பேரின் பெயரையும், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருடன் இணைத்து பள்ளி சுவரில் யாரோ சிலர் ஆபாசமாக எழுதியிருந்தனர்.
 
இதனையறிந்த மாணவிகள் மனமுடைந்து பள்ளியிலே எலி மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர். மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் இந்த கீழ்த்தரமான வேலையை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.