வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (21:44 IST)

தற்கொலை செய்த பெண்ணை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவர் வீட்டார்: அதிர்ச்சி தகவல்

மதுரா பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அவரது கணவர் வீட்டார் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்த அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ம்துரா என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் வீட்டார் அவரை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண் வீட்டின் ஒரு அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனது துப்பட்டாவை எடுத்து மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டுக்கொண்டார்.
 
இதனை வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்த அவரது கணவன் வீட்டார் அறைக்கு வெளியே இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ  வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.