1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. a police complaint agains evks ilangovan

இளையராஜா குறித்து சர்ச்சை பேச்சு: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது புகார்

evks
இளையராஜாவின் ஜாதி குறித்த சர்ச்சைக்கிடமான பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளையராஜாவை கடுமையான விமர்சனம் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தபேலா எடுத்தவனெல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது என்றும் பணமும் புகழும் வந்துவிட்டால் உயர்ந்த ஜாதி ஆகிவிட முடியாது என்றும் பேசினார்
 
 அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இளையராஜாவை ஜாதி வன்மத்துடன் இளங்கோவன் பேசி உள்ளதாகவும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தி கலவரம் தூண்டக்கூடிய வகையில் பேசியதாகவும், அவரை எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்த புகாரை சென்னை அடையாறு சேர்ந்த மூர்த்தி என்பவரை அளித்துள்ள நிலையில் இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசு தான்: தருமபுரம் ஆதீனம்