வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (12:09 IST)

தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசு தான்: தருமபுரம் ஆதீனம்

dharmapuram
தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசு தான்: தருமபுரம் ஆதீனம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஆன்மீக அரசுதான் என தருமபுர ஆதீனம் கூறியுள்ளார்
 
தமிழகத்திலுள்ள ஆதினங்களுடன் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தருமபுர ஆதினம் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதினம் கூறியதாவது:
 
தற்போது நடைபெறும் அரசு ஆன்மீக அரசுதான் என்றும் அரசு அவர்களின் கொள்கைகளை கவனித்து வருகிறார்கள் என்றும் நாங்கள் எங்களது கொள்கைகளை பரப்பி வருகிறோம் என்றும் எங்களது கொள்கைகளில் அரசு தலையிட வில்லை என்பதை பாராட்டுகிறோம் என்று  தருமபுர ஆதீனம் கூறியுள்ளார்