1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A officer appointed for teeth issue

பல் பிடுங்கிய விவகாரம்; விசாரணை அதிகாரியாக அமுதா நியமனம்

பல்
அம்பாசமுத்திர நகரில் விசாரணை கைதி ஒருவரின் பல் பிடுங்கிய விவகாரம்  குறித்து விசாரணை செய்ய அமுதா என்ற அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. 
 
கடந்த பத்தாம் தேதி அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் காவல்துறையினரால் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதனை அடுத்து அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல் புடிங்கிய புகார் குறித்து விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. 
 
இந்த புகார் குறித்து விரிவாக விசாரணை செய்து விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கும்படி தமிழக அரசு அவருக்கு உத்தரவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு..!