1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:01 IST)

ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு..!

ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சட்டமன்ற மாண்பை ஆளுநர் சீர் குலைப்பதை நிறுத்தும் வரை இந்த கண்டன போராட்டம் ஓயாது என்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்துக்கொண்டு இரட்டை ஆட்சி நடத்துவதாகவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை கருத்துக்களை ஆளுநர் தெரிவித்து வருவதாகவும் திமுக கூட்டணி கட்சிகள் புகார் அளித்துள்ளன.
 
Edited by Mahendran