செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (12:00 IST)

மதுரை காமராஜர் பல்கலை மாணவி மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை..!

student suicide
மதுரை காமராஜர் பல்கலை மாணவி மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவி திடீரென மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
 
தேனியை சேர்ந்த 24 வயது மாணவி மகேஸ்வரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர்பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். 
 
மாடியிலிருந்து அவர் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
மேலும் மாடியில் இருந்து விழுந்த மாணவியின் உடல் அருகே செல்போன்இருந்ததால் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran