தொடர்புடைய செய்திகள்
- நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிதி – அரசாணை வெளியீடு!
- 9, 10, 11 வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அரசாணை ரத்தா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- வெளியானது அரசாணை!
- முதல்வர் இல்லத்தை திடீரென முற்றுகையிட்ட 50 பேர்: சென்னையில் பரபரப்பு
- அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு: அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழக மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 என உயர்த்தப்பட்டது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு அதை நடைமுறைப் படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தமிழக அரசு ஊழியர்களை போலவே தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்
