9, 10, 11 வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அரசாணை ரத்தா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைவருக்கும் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது இதனை அடுத்து சமீபத்தில் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது
இந்த நிலையில் இதனை எதிர்த்த வழக்கு ஒன்று சென்னை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அரசாணையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது
மேலும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அனைவரும் தேர்ச்சி என்ற அரசாணையை எதிர்த்து ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.