புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (11:57 IST)

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்
 
அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எனவே இனி வரும் ஆண்டுகளில் 59 வயதாக இருக்கும் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
2021 ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வு பெறும் வயது பொருந்தும் என்றும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது