1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A complaint against annamalai in dgp office

மதக்கலவரத்தை தூண்டுகிறார்: அண்ணாமலை மீது டிஜிபியிடம் புகார்!

அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதக்கலவரத்தை தூண்டுகிறார் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசி வரும் நிலையில் அவர் மதக்கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் பாஜக பிரமுகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் குஷ்பூ, எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!