1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK Congress alliance continues in Local election

மாவட்ட அளவில் பேசி முடிவு பண்ணிக்கலாம்..! – திமுக, காங்கிரஸ் கூட்டணி!

Tamilnadu
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து இன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை போல உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் என கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. தலைமை அளவில் இடங்களை ஒதுக்காமல் மாவட்ட அளவில் இருகட்சி நிர்வாகிகள் மூலமாக பேசி இடங்களை முடிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
யுடியூப் பார்த்து நாட்டு வெடிமருந்து… பன்றி வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது!