1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A College boy made her girlfriend pregnant

பிளஸ் 1 மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது

மாணவன்
கல்லூரி மாணவன் ஒருவன் பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் பலர் இளம்வயதிலேயே தடம் மாறிப் போகின்றனர். எதையுமே உடனடியே அடைந்துவிட வேண்டும், என்ற பொறுமையில்லா குணம் அவர்களின் வாழ்க்கையையே சீர்ழித்துவிடுகிறது.
 
அப்படி மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த கல்லூரி மாணவனான பிரவீன்(20), அதே பகுதியை சேர்ந்த  பிளஸ்-1 படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் நெய் உருக பேசி, உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன், நீ இல்லையென்றால் நான் செத்து விடுவேன், நீதான் எனக்கு எல்லாமே என்றெல்லாம் டைலாக் விட்டு மாணவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். 
 
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். இதனையடுத்து அவர்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீஸார் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு பிடிவாரண்ட்