வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 செப்டம்பர் 2018 (07:45 IST)

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளின் துப்பட்டா பறிப்பு: பெரும் பரபரப்பு

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் பங்கேற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த கல்லூரி மாணவிகள் சிலரின் துப்பட்டாவை போலீசார் பறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்ட அரசு விழா ஒன்றில் மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருசில மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்திருந்தனர். இந்த துப்பட்டாவை முதல்வர் பேசும்போது மாணவிகள் கருப்புக்கொடி காட்ட பயன்படுத்துவார்கள் என கருதிய போலீசார் துப்பட்டாவை பறித்து வைத்து கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவிகளின் துப்பட்டாவை போலீசார் பறித்தது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மபி மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காவல்துறையினர்களின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என பாஜக எம்.எல்.ஏ தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தில் களத்தில் இறங்கி போராட பெண்கள் அமைப்புகளும் திட்டமிட்டு வருகின்றன