திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (12:05 IST)

ஆற்றில் குதித்த காதலி...விஷம் அருந்தி தற்கொலை செய்த மாணவன்

தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விக்னேஷ்(20) என்பவரும் அதே கல்லூரில் படிக்கும் ஜெயஸ்ரீ(22) என்பவரும் இரண்டு ஆண்டுகளாக  காதலித்து வந்தனர்.

 
இந்நிலையில் கடந்த 31ம் தேதி விக்னேஷ் தனது காதலியின் செல்போனை வாங்கி பார்த்து அதிலிருந்த சில எண்களைக் குறித்து தன் காதலியிடம் கேட்டிருக்கிறார். இதனால் தன்னை காதலன் சந்தேகப்படுவதாக நினைத்துக் கொண்ட ஜெயஸ்ரீ அவருடன் சண்டை போட்டுள்ளார். அதன்பின் இருவரும் சமாதானம் அடைந்தனர்.
 
பின்பு ஜெயஸ்ரீயை நெய்வாய்க்கால் பகுதியில் உள்ள கல்லணைக்கு  தன் இரு சக்கர வாகனத்தில் விக்னேஷ் அழைத்துச் சென்றார்  அப்போதும், இருவருக்கும் மீண்டும் சண்டை எழுந்ததாக தெரிகிறது. அதனால் மனம் உடைந்த ஜெயஸ்ரீ அருகே ஓடும் கல்லணையில் திடீரெனக் குதித்தார். காதலி ஆற்றில் குதித்ததைச் சற்றும் எதிர் பார்க்காத விக்னேஷ் தானும் ஆற்றில் குதித்து உடனே ஜெயஸ்ரீயைக் காப்பற்ற முயன்றார். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து இருவரையும் கப்பாற்ற முற்பட்டனர். ஆனால் விக்னேஷை மட்டுமே அவர்களால் காப்பற்ற முடிந்தது. இது நடந்து இரு நட்களுக்கு பிறகே ஜெயஸ்ரீயின் உடல்  துறையூர் ஆற்றுப் பாலத்தின் அருகே சடலமாகக் கிடந்துள்ளது.
 
தன் காதலி தற்கொலைக்கு முயன்ற நாளில் இருந்தே வேதனையுடன் சோகமயமாக காணப்பட்ட விக்கேஷ், ஜெயஸ்ரீ இறந்து போனது தெரிந்ததும் தானும் தற்கொலைக்கு முயன்று விஷம் பருகியுள்ளார். அவரை தஞ்சை மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.