ஆசிரியைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த பள்ளி மாணவன் கைது
வேலூரில் மள்ளி மாணவன் ஒருவன் பள்ளி ஆசிரியைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாலா என்ற ஆசிரியை ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆசிரியை மாலாவை அதே பள்ளியில் படித்து வந்த ரஞ்சித் பிளஸ் 2 மாணவன் ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார்.
இது ஆசிரியைக்கு தெரியவரவே, அவர் அந்த மாணவனை அழைத்த மாலா, இப்படியெல்லாம் செய்யக்கூடாது, நீ உன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். ஆனாலும் திருந்தாத ரஞ்சித் ஒரே நாளில் ஆசிரியையின் செல்போனுக்கு 160 லவ் மெசேஜ்களை அனுப்பியுள்ளான்.
இதனால் ஆடிப்போன ஆசிரியை மாலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து போலீஸாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீஸார் மாணவன் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.