1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. a christian group given their support to vijay

திமுகவுக்கு விழுந்த அடி!.. தவெக பக்கம் போன ஆதரவு!.. விஜய் செம ஹேப்பி!....

vijay stalin
தவெக தலைவர் விஜய் சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற கிறிஸ்துவ சமத்துவ விழாவில் கலந்து கொண்டார். அதில் பேசிய விஜய் ‘கிறிஸ்துவ சமயம் பற்றியும் பைபிள் பற்றியும் பேசினார். மேலும், தனது சொந்த சகோதரர்கள் செய்த துரோகத்திலிருந்து இயேசு கிறிஸ்து மீண்டு வந்து நாட்டைக் காப்பாற்றினார்’ என் பேசினார். மேலும் நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்று பேசி அதிர வைத்தார்.

இந்நிலையில், இந்த மேடையில் பேசிய ஒரு கிறிஸ்துவ ஃபாதர் ‘நாங்கள் அரசியல் பேசுவதற்காக இங்கு வரவில்லை. ஆனால் அவருக்கு தோளுக்கு தோளாக நிற்கவே இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் கிறிஸ்துவர்கள் 234 தொகுதிகளும் இந்திய ஊழிய ஐக்கிய ஊழிய கிறிஸ்துவ இயக்கம்
 என்கிற இயக்கத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் விஜய்யோடு துணை நிற்போம். தோளோடு தோள் கொடுப்போம்.

ஏனெனில் கடந்த பல வருட திராவிட ஆட்சியில் நாங்கள் பல முக்கிய கோரிக்கைகளை வைத்தோம். அதில் ஒரு சில கோரிக்கைகளை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.. போராடி போராடி ஓய்ந்து விட்டோம்.. கண்டிப்பாக தளபதி விஜய் 2026 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக அமரும்போது இதையெல்லாம் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்

கடந்த பல வருடங்களாகவே சிறுபான்மையினராக பார்க்கப்படும் கிறிஸ்துவர்களின் வாக்குகள் திமுகவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது தற்போது கிறிஸ்துவத்தில் பல அமைப்புகள் ஒன்றான ஒரு அமைப்பு விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை பிரபல சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘திமுகவுக்கு ஒரு கெட்ட செய்தி’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
திமுகவின் A டீம்தான் தவெக!.. எல்லாம் கள்ளக்கூட்டணி!..தெறிக்கவிட்ட அர்ஜூன் சம்பத்