திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 ஜூலை 2018 (20:20 IST)

கடன் பிரச்சனையால் தனியார் நிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை

கோவையில் தனியார் நிறுவன அதிபர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி மருதமலை சாலையில் உள்ள கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் பிரசன்னா (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு விஷாலினி என்ற மகள் உள்ளார். பிரசன்னா குடிநீர் சுத்திகரிக்கும் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
 
பிரசன்னாவிற்கு தொழிலில் போதிய அனுபவம் இல்லாததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசன்னா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனமுடைந்த பிரசன்னா தனது மகளை தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மனைவியுடன் வி‌ஷம் குடித்துள்ளார். 
 
இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசன்னா உயிரிழந்துவிட்டார். அவரது மனைவி பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடன் பிரச்சனையால் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.