ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
4 ஆண்கள், 7 பெண்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.