திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (22:00 IST)

8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 9ஆம் வகுப்பு மாணவி

மும்பையில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காந்திவிலி தாக்கூர் வில்லேஜ் என்ற பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டின் 5வது மாடியில் பெற்றோர்களுடன் வசித்து வந்த ஹர்சிகா என்ற 9ஆம் வகுப்பு மாணவி நேற்று திடீரென 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
 
அவர் தற்கொலை செய்து கொள்ள 8வது மாடியில் இருந்து விழும்போது அந்த அபார்ட்மெண்டிற்கு எதிரே உள்ள வீட்டில் இருந்து ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்சிகா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவருடைய சமூக வலைத்தள பக்கங்களையும் மொபைல் போனையும் ஆய்வு செய்து வருகின்றனர்.