1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (19:30 IST)

போலீசார் முன் பூச்சிமருந்து குடித்த விவசாயி மரணம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை போலீசார் தாக்கியதாகவும், இதனால் அவமானம் அடைந்த அவர் உடனே போலீசார் முன்பே பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல். இவர் சமீபத்தில் தனது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த‌போது அவர் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக போலீசார் கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சக்திவேலை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையும் அவமானமும் அடைந்த  சக்திவேல் உடனே தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தன்னை அடித்த போலீசார் முன்பே எடுத்து குடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த போலீஸ் அதிகாரி உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி சக்திவேல் மரணம் அடைந்தார்
 
இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் சக்திவேல் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர். விவசாயி சக்திவேலின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் வள்ளியூர் - சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் கூடுதல் கண்காணிப்பாளர் உதயகுமார் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது