வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (10:26 IST)

முறை தவறிய காதல் : ரயிலில் பாய்ந்து இளஞ்சோடி தற்கொலை : திருச்சியில் அதிர்ச்சி

முறை தவறிய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவரும், மாணவியும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருச்சி அருகே ஜீயபுரம் அருகேயுள்ள கடியாக்குறிச்சி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன், அதே பகுதியியை சேர்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.  சிறுவன் 12ம் வகுப்பும், சிறுமி 9ம் வகுப்பும் படித்து வந்துள்ளன்ர. 
 
தூரத்து உறவு முறையில் அண்ணன், தங்கை வரும் என்பதால் அவர்களின் பெற்றோர்கள் இருவரையும் கண்டித்து, காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற இருவரும் மாலை கடியாக்குறிச்சி ரெயில் நிலையம் அருகே சென்று மனம் விட்டு பேசியுள்ளனர். தங்கள் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்தனர். எனவே, வாழ்வில் இணைய முடியவில்லை. எனவே சாவில் இணைகிறோம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் கைகோர்த்து நடந்துள்ளனர்.
 
அப்போது, அந்த பக்கம் வந்த ரயிலில் மோதி அவர்களின் உடல் துண்டு துண்டாக சிதறியது. உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதனர்.
 
அதன் பின் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.