தொடர்புடைய செய்திகள்
- கோவில் திருவிழாவில் பணத்தை வீசியெறிந்த குஜராத் எம்.எல்.ஏ
- வீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா...?
- காரில் செல்லும்போது கண் மை போட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்
- ஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி
- 18 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மூன்றாவது நீதிபதி நியமனம்!
2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி முடிந்து இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே, 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது மூன்றாம் நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்துள்ளார். இவரது தீர்ப்பு வெளியாக சில மாதங்கள ஆகும் என்றாலும், இந்த தீர்ப்பை எதிர்ப்பார்த்து அரசியல் கட்சிகள் காத்துக்கிடக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்
