கோவில் திருவிழாவில் பணத்தை வீசியெறிந்த குஜராத் எம்.எல்.ஏ

Last Modified திங்கள், 18 ஜூன் 2018 (15:45 IST)
குஜராத்தில் நடந்த திருவிழா ஒன்றில் பிரபல பாடகி ஒருவர் பாடல்களை பாடி கொண்டிருந்தபோது அங்கு வந்த காங்கிரஸ் பிரமுகர் அல்பேஷ் தாகூர் என்பவர் தன்னிடம் இருந்த பணத்தை பொதுமக்களை நோக்கி வீசியெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் பிரமுகராகவும், ராதான்பூர் தொகுதி எம்.எல்.ஏஆகவும் இருப்பவர் அல்பேஷ் தாகூர். இவர் சமீபத்தில் தனது தொகுதியில் நடந்த ஒரு திருவிழாவுக்கு சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் வட இந்தியா முழுவதும் புகழ் பெற்ற பாடகி கீதா ரப்ரி என்பவர் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அப்போது உற்சாக மிகுதியில் அல்பேஷ், தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பொதுமக்களை நோக்கி வீசியெறிந்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் மிக வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வீசியெறிந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் பத்து ரூபாய் நோட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :