தொடர்புடைய செய்திகள்
- ரயிலில் அடிபட்டு சிதைந்து போன வாலிபர்.. சென்னை அருகே நடந்த கொடூரம்
- தேர்தல் நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை.. வேலூரை புறக்கணித்த கமல்
- இன்று அத்திவரதர், உள்ளூர் மக்களுக்கு காட்சி அளிக்கமாட்டார்..காரணம் என்ன?
- அத்திவரதரை தரிசித்த வரிச்சியூர் செல்வம் – விவிஐபி பாஸ் கொடுத்தது யார் ?
- காதல் தோல்வியால் ”ஆசிட்” குடிக்க முயன்ற மாணவி.. காதலனை கைது செய்த போலீஸார்
அத்திவரதரை தரிசிக்க வந்த 3 பேர் பலி…
அத்திவரதரை தரிசிக்க வந்த 3 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதர் காட்சித் தந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்ற நிலையில் இன்று கூட்ட நெரிசலில் 100 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது அத்திவரதரை தரிசிக்க வந்த 3 பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க நீண்ட கூட்டம் வரிசையில் நின்றபோது, கூட்டம் திறந்துவிடப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய நடராஜன், கங்காலட்சுமி, நாராயணன் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.
