வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (14:25 IST)

இன்று அத்திவரதர், உள்ளூர் மக்களுக்கு காட்சி அளிக்கமாட்டார்..காரணம் என்ன?

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சித் தரும் அத்திவரதர், கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சித் அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17 நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை லட்சக்கணக்கன பக்தர்கள் அத்திவரதரை காண குவிந்தனர். இந்நிலையில் கூட்டத்தை கட்டுபடுத்தவும் கூட்ட நெரிசலில் சிக்கி அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் பக்தர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் யாரும் அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சமீபத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 80 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயக்கமடைந்ததால், சிகிச்சை எடுத்து வருவதாக ஒரு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.