திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (17:44 IST)

மனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்!

வங்காள தேச நாட்டில் வசித்து வருபவர் ஜலாலுதீன்(47). இவர் பிரித்தானியாவில் சமையல் கலைஞராக வேலை செய்துவந்தார். இவரது மனைவி அஸ்மா பேகம். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன புதிதிலேயே ஜலாலுதீன் சூதாட்டிற்கு அடிமையானவர் என்பதை அறிந்துகொண்டார்.
பின்னர் சூதாட்டத்திற்கு  செல்லும் போது மனைவியை அடித்து அவரிடமுள்ள, பணத்தை எடுத்துக்கொண்டு சூதாட்டத்திற்கு கொண்டு செல்வார். 
 
ஆனால், தான் பங்கேற்கும் பெரும்பாலான சூதாட்டத்தில் தோல்வியையே தழுவியுள்ளார். அதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி பேகத்துக்கும், ஜலாலுதீனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
 
ஒருகட்டத்தில் இந்த தொந்தரவு மேலும் அதிகமாகியுள்ளது. ஒருநாள் இதேபோல் மனைவியிடம் பணத்தை பறித்துக்கொண்டு சூதாட்டத்திற்குச் சென்றவர்,வீட்டுக்கு வரும் போது, பாம்புகளுக்கு பொருட்களை வாங்கி வந்துள்ளார். இதனை அஸ்மா தன் சகோதரர்களுடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
 
பின்னர் அஸ்மாவின் சகோதரர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, அஸ்மாவின் உடலில் 60 இடங்களில் கத்தியால் குத்தி கொடுரமாக கொலை  செய்துள்ளார் ஜலாலுதீம்ன். இதுகுறித்து போலீஸுடம் புகார் தெரிவித்ததை அடுத்து, புகாரின் அடிப்படையில் ஜலாலுதீனை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.